டேட்டிங் ஆப் மூலம் பணம் பறிப்பு… ஜிபே மூலம் வாலிபரிடம் பணம் பறித்த 5 பேர் கைது

Dating App Extortion: ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் இளைஞரை சந்திக்க வரவழைத்து, அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டி ரூ.25 ஆயிரம் ‘ஜிபே’ மூலம் பறித்ததாக வேன் டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published on: September 1, 2026 at 12:08 pm

சென்னை, செப். 1 2026: சென்னையை அடுத்த மூவரசம்பட்டில் தங்கி பேக்கரியில் வேலை செய்து வரும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஏழுமலை (23), பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார். அதில், வேனில் வந்த 5 பேர் தன்னை மிரட்டி ரூ.25 ஆயிரத்தை ‘ஜிபே’ மூலம் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் பசுபதி மற்றும் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஏழுமலை ஓரினச்சேர்க்கைக்கான டேட்டிங் செயலி மூலம் பெருங்குடியை சேர்ந்த வேன் டிரைவர் அய்யனார் (23) என்பவரை தொடர்பு கொண்டது தெரியவந்தது. தனியாக சந்திக்கலாம் என அய்யனார் கூறியதை தொடர்ந்து, ஏழுமலை நேற்று முன்தினம் இரவு அவரை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது அய்யனாருடன் பெருங்குடியை சேர்ந்த பால் வியாபாரி கோகுலகிருஷ்ணன் (24), ஆன்லைன் பொருட்கள் டெலிவரி செய்யும் ஹரிஹரன் (24), வேளச்சேரியை சேர்ந்த செல்வம் (19), திருமுல்லைவாயலை சேர்ந்த பால் வியாபாரி மதன்குமார் (24) ஆகியோர் வேனில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏழுமலையை பார்த்ததும், அவரது தனிப்பட்ட விஷயங்களை பெற்றோரிடம் தெரிவித்து விடுவதாக 5 பேரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஏழுமலை, ரூ.25 ஆயிரத்தை ‘ஜிபே’ மூலம் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், அவரை வேனில் இருந்து இறக்கிவிட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏழுமலையை மிரட்டி பணம் பறித்ததாக வேன் டிரைவர் அய்யனார் மற்றும் அவரது நண்பர்கள் கோகுலகிருஷ்ணன், ஹரிஹரன், செல்வம், மதன்குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் Subscription ஆபாச வீடியோ.. திருச்சி சாதனா மீது வழக்கு பதிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com