Nepal floods : நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 5 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளார்கள்; 900 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nepal floods : நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 5 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளார்கள்; 900 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: August 31, 2026 at 4:43 pm
காத்மாண்டு, ஆக.31, 2026: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,247 பேர் காணாமல் போயுள்ளனர். பிரதமர் பாலேந்திர ஷா, “நாடு கற்பனைக்குப் புறம்பான பேரிடரை எதிர்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 26 அன்று நேபாள–திபெத் எல்லை அருகே பனிச்சரிவு மற்றும் பாறை இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல நகரங்கள், கிராமங்களை அழித்தது. ஆறு மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிட்வான் மாவட்டத்தில் 272, நவல்பராசி கிழக்கில் 207, நவல்பராசி மேற்கில் 151, கோர்காவில் 62, நுவாகோட் மாவட்டத்தில் 95, தாடிங் 55, தனாஹு 37, ராசுவா 24 என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 4,247 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 85 பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் 320 வெளிநாட்டினரும் அடங்குவர். மீட்புப் பணிகள் ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடுமையான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் தொடர்ந்த அபாயங்கள் காரணமாக மீட்பு பணிகள் சவாலாக உள்ளன.
பிரதமர் பாலேந்திர ஷா, “நமது நாடு கற்பனைக்குப் புறம்பான, மனதை உடைக்கும் இயற்கை பேரிடரை எதிர்கொள்கிறது. உயிரிழப்புகள், சொத்து சேதங்கள், அடிப்படை வசதிகள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு செய்வது மிகவும் கடினமாக உள்ளது. இருந்தாலும், குடிமக்களின் உயிர்களை காப்பாற்ற உறுதியுடன் செயல்படுகிறோம்” என சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் சாலைகள், வீடுகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மீட்பு குழுக்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த பேரிடர், நேபாளத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை பேரழிவாகக் கருதப்படுகிறது.
ஓய்வு நீதிபதி கதி என்ன?
இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் காணாமல் போன சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி. சிவஞானத்தை தேடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என இந்திய தலைமை நீதிபதிக்கு சென்னை பார் அசோசியஷனில் இருந்து அவசரமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மதராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஏ. கமலநாதன் மற்றும் செயலாளர் ஜே. போதிராஜ் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில், “ஓய்வு பெற்ற நீதிபதி வி. சிவஞானம் ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போயுள்ளார். அவரை தேடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், ஆகஸ்ட் 30ஆம் தேதி டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கமும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது. அதில், “சிவஞானம் நீதிபதி யாத்திரிகர்களுடன் நேபாளத்தில் பயணம் செய்தபோது வெள்ளம் ஏற்பட்டது. மற்றொரு பேருந்தில் பயணித்தவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர் பயணித்த பேருந்து 100–200 மீட்டர் தூரத்தில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தினர் மற்றும் சங்கம் அவரது பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையில் உள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி சிவஞானம் 34 ஆண்டுகள் நீண்ட காலம் நீதித்துறையில் பணியாற்றியவர். மதராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய அவர், 2025 ஜூலையில் ஓய்வு பெற்ற பின் உச்சநீதிமன்றம் அவரை மூத்த வழக்கறிஞராக நியமித்தது. தற்போது, இந்திய மற்றும் நேபாள அதிகாரிகள் இணைந்து அவரை தேடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என இரண்டு பார் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க : இமயமலை பனிச்சரிவு, திபெத் நிலநடுக்கம்.. நேபாளத்தில் பனிச்சரிவுக்கு என்ன காரணம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com