Jaishankar Meets Putin: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்; அப்போது, கூடங்குளம் அணு உலை ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பான பேச்சுக்கள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Jaishankar Meets Putin: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்; அப்போது, கூடங்குளம் அணு உலை ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பான பேச்சுக்கள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: August 26, 2026 at 5:04 pm
மாக்கோ, ஆகஸ்ட் 26, 2026; மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், எரிசக்தி, உரங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பம், கூடங்குளம் அணுஉலை ஒத்துழைப்பு விரிவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 2030க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக இலக்கை அடைய வேண்டும் என்ற இலக்கு இரு தரப்பினராலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், புதின் இந்திய விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உர விநியோகத்தை அதிகரித்து வருகிறோம் என்றும், தொடர்ந்து வழங்க தயாராக உள்ளோம் என்றும் உறுதியளித்தார். அதேபோல், எரிசக்தி துறையில் கச்சா எண்ணெய், நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்கும் பணிகள் விரிவடையும் என்று தெரிவித்தார்.
வர்த்தக நிலையைப் பார்க்கும்போது, 2024-25 நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் $68.7 பில்லியன் என்ற சாதனை உயரத்தை எட்டியது. 2025-26ல் $59.8 பில்லியன் என்ற அளவுக்கு குறைந்திருந்தாலும், 2026ல் மீண்டும் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தில் $50 பில்லியன் பற்றாக்குறை இந்தியாவுக்கு சவாலாக உள்ளது.
உயர் தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக, இந்தியா-ரஷ்யா இணைந்து உயர் வேக மின்சார ரயில் மாதிரியை 2026 இறுதிக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன. விண்வெளி ஆராய்ச்சி, அரிய உலோகங்கள், போக்குவரத்து பொறியியல் போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பு விரிவடைகிறது. மேலும், யுரேஷியன் எக்கனாமிக் யூனியன் (Eurasian Economic Union) உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அரசியல் ரீதியாக, புதின் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களும் ஆகஸ்ட் 31-செப்டம்பர் 1 SCO உச்சி மாநாட்டிலும், செப்டம்பர் 12-13 BRICS உச்சி மாநாட்டிலும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்புகள், இந்தியா-ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணங்களாகக் கருதப்படுகின்றன.
இதையும் படிங்க; டொனால்ட் ட்ரம்பின் ‘கேட்கீப்பர்’.. யார் இந்த நடாலி ஹார்ப்.. அதிரும் அமெரிக்கா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com