15 பேர் பயணம்.. 2 பேர் மீட்பு; 13 அகதிகள் கதி என்ன?

Boat Tragedy: துனிசியாவில் இருந்து இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 அகதிகள் சென்ற படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்தது. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 13 பேர் மாயமாகியுள்ளனர்.

Published on: August 22, 2026 at 12:15 pm

துனிஸ், ஆகஸ்ட் 22: துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 15 அகதிகள், மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டனர். துனிசிய கடல் எல்லையை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, படகில் இருந்த 15 பேரும் கடலில் தத்தளித்தனர்.

விபத்தில் சிக்கியவர்களில் 2 பேரை அந்த வழியாக சென்ற மீன்பிடி படகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர். எனினும், மீதமுள்ள 13 பேரை காணவில்லை. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார காரணங்களுக்காக மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக செல்ல முயற்சித்து வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான கடல் பயணங்களின்போது படகுகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது.

இந்த நிலையில், மாயமான 13 பேரையும் கண்டறிந்து மீட்கும் பணியில் துனிசியா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் நிலை குறித்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க :ட்ரம்ப் நெருக்கமான உதவியாளர்.. யார் இந்த ஹோப் ஹிக்ஸ்?

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள்
Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com