மதுரை, ஆக. 26, 2026: இந்தியாவின் பாரம்பரிய நகை நிறுவனமான வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (VBJ) சார்பில் மதுரையில் பிரத்யேக நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2026 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி,ஃபார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல், பாண்டியன் ஹாலில் எஸ்.எச் 72, அவுட்போஸ்ட், ராமோண்ட் ரிசர்வ் லைன், மதுரைபகுதியில் நடைபெறுகிறது. இரு நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.
கண்காட்சியில் தங்கம், வைரம், சாலிடையர் மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட பல்வேறு வகையான நகைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, பழைய தங்க நகைகளை மாற்றிக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.125 கூடுதல் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும்.
மணமகளுக்கான பிரம்மாண்ட நகைகள் முதல் நேர்த்தியான நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், செயின்கள் மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பாரம்பரிய நகைக் கலைநயத்துடன் நவீன வடிவமைப்புகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பு, விபிஜே-யின் கைவினைத் திறன் மற்றும் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
கோயம்புத்தூரின் 100 அடி சாலையில் புதிய விபிஜே ஷோரூம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மதுரையில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நகைக் கண்காட்சி, தென் தமிழகத்தில் விபிஜே-யின் பிரத்யேக நகை வடிவமைப்புகள் மற்றும் சிறப்பு சலுகைகளை நேரடியாக அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: நகைக் கடைகளில் தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.. மத்திய அரசு ஆலோசனை?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்