Rehabilitation Assistance : கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Rehabilitation Assistance : கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று, விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Published on: August 31, 2026 at 4:30 pm
சென்னை, ஆக.31, 2026: தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்களுக்கான பல்வேறு நலன்கள் மற்றும் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார். செப்டம்பர் 1, 2026 முதல் ஊழியர்களின் மாத ஊதியம் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த 23 ஆண்டுகளாக ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.486.90 கோடி செலவாகும்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும். ஆண்டுதோறும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6,000 வழங்கப்படும். சில்லறை கடைகளில் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாநகர கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும். பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.
பணியாளர்களின் முன்னேற்றத்திற்காக, தகுதியுடைய 250 பேரை சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-இலிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
மெத்தனால் கட்டுப்பாடு மற்றும் போலி மதுபானங்களை தடுக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்படும். உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள ‘e-Kalaal’ தளத்தில் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும். மதுபான இறக்குமதி, பீர் ஏற்றுமதி உள்ளிட்ட செயலிகள் முழுமையாக மின்னணுமயமாக்கப்படும். இதற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு 10 நான்கு சக்கர வாகனங்கள், 10 கண்காணிப்பு ட்ரோன்கள் உள்ளிட்ட கருவிகள் வாங்க ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி செலவிடப்படும். இதற்கிடையில், டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும்; மூன்று மாதங்களில் மீண்டும் தவறு நடந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படும் என அவர் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க : விஜய் vs ராகுல் காந்தி.. யார் பிரதமர் வேட்பாளர்? கூட்டணியை முறிக்கிறதா காங்கிரஸ்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com