ராகுல் காந்தியை முந்துவாரா விஜய்? பிரதமர் வேட்பாளர் யார்?

Vijay vs Rahul: PM Race? : யார் வேண்டுமானாலும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம் ஆனால் 2029ல் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைய எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Published on: August 30, 2026 at 12:24 pm

சென்னை, ஆக. 30 2026: கடந்த சில தினங்களாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அடுத்த பிரதமராக வருவார் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்; இது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் 2029 சட்டப்பேரவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது; இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி, 49 சதவீதத்திற்கு மேல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.


இரண்டாம் இடத்தில் உள்ள ராகுல் காந்திக்கு 27 சதவீத ஆதரவு உள்ளது; இந்த நிலையில் ஜோசப் விஜய்க்கு 9 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அவர் பிரதமர் போட்டியில் மூன்றாம் இடம் வைக்கிறார். நான்காம் இடத்தில் உள்ள அபிஜித் தீப்ங்கே -க்கு ஒரு சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக பதிலளித்த ஜோதிமணி, ஜோசப் விஜய் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பதெல்லாம் தேர்தல் யுக்தி என பொருள்படும்படி பேசினார். ஜோதி மணியின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைகிறது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com