ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம்.. போஸ்ட் ஆபிஸில் பணி.. முழு விவரம்!

Post Office Jobs: ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும் வகையில் போஸ்ட் ஆபிஸில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published on: September 1, 2026 at 11:20 am

சென்னை, செப் 1, 2026: இந்திய அஞ்சல் துறையில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆகஸ்ட் 31 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 2,118 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால், பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். நகர புறங்களை விட கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

இந்த பணிகள் கிராமின் தக் சேவக் (GDS) பிரிவின் கீழ் உள்ளன. கிளை போஸ்ட் மாஸ்டர் பதவியில் தேர்வாகும் நபர்கள் தபால் நிலையத்தின் தினசரி பணிகளை மேற்கொள்வதோடு, இந்தியா அஞ்சல் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும். உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவியில் இருப்பவர்கள் கடிதங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்வது, அஞ்சல் தலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது, வங்கிச் சேவைகளில் உதவுவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். டாக் சேவக் பதவியில் இருப்பவர்கள் தபால் நிலையம், கடித பிரிப்பு மையம், டெலிவரி மையம் போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இப்பணிகள் நிரந்தர அரசு வேலைகளாக கருதப்படவில்லை. மத்திய அரசின் நிரந்தர ஊழியர்களுக்கான சலுகைகள் இப்பணியில் கிடையாது. ஜிடிஎஸ் விதிமுறைகளின் கீழ் சம்பளம், கொடுப்பனைகள், பணிக்கொடை போன்றவை வழங்கப்படுகின்றன. முழுநேர பணி அல்ல; ஒருவர் தினசரி 4 முதல் 5 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டும். 65 வயது வரை பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.

சம்பள விவரங்களில், கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை, உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை வழங்கப்படும். வருடத்திற்கு 3% சம்பள உயர்வு உண்டு. அகவிலைப்படி, சமூக பாதுகாப்பு சலுகைகள், பணிக்கொடை, பணி விடுவிப்பு பயன் திட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் கிடையாது. இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும். கணினி இயக்கும் திறன், மிதிவண்டி ஓட்டுதல் தெரிந்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் பெற்றவர்கள் தபால்காரர், தபால் உதவியாளர் போன்ற நிரந்தர அரசு பணிகளுக்கு போட்டித் தேர்வின் மூலம் பதவி உயர்வு பெறலாம். விண்ணப்பங்கள் India Post GDS Online இணையதளத்தில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 21 வரை பெறப்படுகின்றன.

இதையும் படிங்க : ஓராண்டு முதுகலை படிப்பு.. மாணாக்கர்களிடையே பெரும் வரவேற்பு.. 12 ஆயிரம் பேர் விண்ணப்பம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com