கூடா நட்பு கேடாய் முடியும்.. தாய்-மகளை கொன்ற இன்ஸ்டாகிராம் காதலன்!

Tiruppur Double Murder: திருப்பூரில் நடந்துள்ள இந்த இரட்டைக் கொலை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: August 11, 2026 at 3:31 pm

திருப்பூர், ஆக.11, 2026: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பு இரட்டை கொலையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனிச்சாமி என்பவரின் மனைவி தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி வீட்டில் இருந்தபோது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அக்‌ஷய் திடீரென வீட்டிற்குள் நுழைந்து ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்றபோது, பலத்த காயம் அடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தனர். உடனடியாக பொதுமக்கள் அக்‌ஷயை மடக்கிப் பிடித்து காவல்துறைக்கு ஒப்படைத்தனர்.

பல்லடம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் வந்து சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், அக்‌ஷய் மற்றும் பூவரசி கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்ததாகவும், பின்னர் காதலாக மாறி திருமணம் நடந்ததாகவும் தெரியவந்தது. ஆனால், பூவரசி தனது தாய் வீட்டிலேயே இருந்து வேலைக்கு சென்றதால், அக்‌ஷயை தவிர்த்து வந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த அக்‌ஷய் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தாய் மற்றும் மகள் இருவரும் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் அக்‌ஷயை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : நாகர்கோவிலில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்.. விபத்தை நேரில் பார்த்தவர் மரணம்!

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? டி.டி.வி தினகரன்
TTV Dinakaran

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com