Prudential Health India : ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிடெட்) தனது முதல் பிராண்ட் கேம்பெயினான ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியுள்ளது.
Prudential Health India : ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிடெட்) தனது முதல் பிராண்ட் கேம்பெயினான ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: September 25, 2026 at 5:06 pm
Updated on: September 25, 2026 at 5:42 pm
மும்பை, செப்.25, 2026: ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா (ப்ருடென்ஷியல் எச்சிஎல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிடெட்) தனது முதல் பிராண்ட் கேம்பெயினான ‘சென்ஸ் பன்தா ஹை’யை அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பையில் செப்டம்பர் 10-ஆம் தேதி அறிமுகமான இந்த டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் கேம்பெயின், ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான சிக்கலான நடைமுறைகளை எளிமையாக எடுத்துரைக்க ஹியூமர் மற்றும் குடும்பத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதைகளைப் பயன்படுத்துகிறது.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து பொதுவாக நோய், நிச்சயமின்மை அல்லது நிதி கவலை ஏற்படும் நேரங்களில் மட்டுமே பேசப்படும் நிலையில், அதனுடன் தொடர்புடைய முடிவுகளைப் புரிந்துகொள்வது பலருக்கு சவாலாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை மாற்றும் நோக்கில், ஹெல்த் ஈவென்ட்டுக்கு முன்பும், அதன் போதும், அதன் பிறகும் குடும்பங்கள் எளிதாகவும் நம்பிக்கையுடனும் முடிவெடுக்க உதவும் வகையில் கேம்பெயின் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேம்பெயினில் மூன்று திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘சைல்ட் ப்ரொடெக்ட்’ மூலம் குழந்தையின் எதிர்காலத்திற்கான திட்டமிட்ட ஹெல்த் பாதுகாப்பையும், ‘ப்ரீ-போஸ்ட் எக்ஸ்பிரஸ் பே’ மூலம் மருத்துவச் செலவுகளுக்கான ரீஇம்பர்ஸ்மென்ட் நடைமுறையை எளிமைப்படுத்துவதையும் நிறுவனம் எடுத்துக்காட்டுகிறது. ‘ஹெல்த் செக்-அப் கன்சல்டேஷன்’ மூலம் மருத்துவப் பரிசோதனை முடிவுகளைப் புரிந்துகொள்ள டாக்டர் ஆலோசனையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
ப்ருடென்ஷியல் ஹெல்த் இந்தியா எம்டி மற்றும் சிஇஓ டிசிக்னேட் அமித் டேவ் கூறுகையில், நிதிப் பாதுகாப்பைத் தாண்டி, வாடிக்கையாளர்களின் சுகாதாரப் பயணத்தின் பல்வேறு கட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்வுகளை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கம் என்றார். ‘சென்ஸ் பன்தா ஹை’ கேம்பெயின், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் அணுகுமுறையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆஃபிசர் மனேஷா குல்கர்னி கொலாக்கோ கூறுகையில், வாடிக்கையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தரப்பினரிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த கேம்பெயின் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். ஹெல்த் இன்ஷூரன்ஸில் தேவையற்ற சிக்கல்களை குறைத்து, வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளுக்கு தெளிவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குவது கேம்பெயினின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும்.. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com