அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும்.. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Bank Employees Strike: வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அறிவித்துள்ளனர்.

Published on: September 24, 2026 at 6:25 pm

சென்னை, செப்.24, 2026: வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 7 வங்கி ஊழியர் சங்கங்கள் இடம்பெற்றுள்ள யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

தற்போது வங்கிக் கிளைகளுக்கு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக மாற்றி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள் வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஊழியர் சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதுதவிர, அரசின் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டமான PLI-யில் மாற்றங்கள் செய்ய வேண்டும், அந்தத் திட்டம் தொடர்பாக வங்கி நிர்வாகங்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் சங்கங்கள் முன்வைத்துள்ளன.

5 நாள் வங்கி வேலை வாரம் தொடர்பான முன்மொழிவு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் இந்த கோரிக்கை தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 5 நாள் வேலை வாரத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வேலைநிறுத்தத்தின் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது.

செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், வங்கி சேவைகளில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்ததாக அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என UFBU எச்சரித்துள்ளது. இதனிடையே, செப்டம்பர் 28 முதல் 30 வரை வேலைநிறுத்தம் முடிந்த பின்னர் அக்டோபர் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கடைப்பிடிக்கும். எனவே, வேலைநிறுத்த நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறைகளை கருத்தில் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் கிளை சேவைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகிறது.

இதையும் படிங்க : மல்டி அசெட் VS ஃப்ளெக்ஸி கேப்.. முதலீட்டாளர்களே, இதை தெரிஞ்சு வச்சிக்கோங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com