வீரமணி போக்சோ வழக்கு.. யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை.. மு.க ஸ்டாலின்

Gem Veeramani POCSO Case : ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி போக்சோ வழக்கில் யாரையும் காப்பாற்ற உத்தரவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: September 25, 2026 at 5:19 pm

சென்னை, செப்.25, 2026: சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற மற்றும் இழிவான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீரமணியுடன் தொடர்புடையவர்கள், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் அல்லது அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் என யாராக இருந்தாலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கக் கூடாது என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் முடிவு, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட யாருக்கும் எண்ணம் வராத வகையில் அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவராக மட்டுமின்றி, ஒரு குடும்பத்தலைவராகவும், மனசாட்சி உள்ள மனிதராகவும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த வழக்கை முன்வைத்து தேவையின்றி குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.க. மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்றுவதற்காக தி.மு.க. ஆட்சியில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவை அனைத்தும் பொதுவெளியில் உள்ள, மறுக்க முடியாத உண்மைகள் என்றும், எனவே யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தி.மு.க. ஆட்சிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நடப்பதாகக் கூறி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் பொதுவெளியிலும் ஊடகங்கள் முன்னிலையிலும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும் நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற செயல்கள் தி.மு.க. ஆட்சியில் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தல் அரசியலுக்கான கருவியாகப் பயன்படுத்துவதை ஆளும்கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்றும், தி.மு.க. குறித்து முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகளை விட, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதே அனைவரின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : “இது என் ரூம் அல்ல.. வீடியோவில் இருப்பது நான் அல்ல”.. ஆர். வீரமணி வழக்கை முடிக்க போலீசார் திட்டமிட்டது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com