நெருக்கடி கால நெருப்பாற்றை தாண்டி சாதனை படைத்த முரசொலி.. கி. வீரமணி வாழ்த்து

K Veeramani: “85ஆம் ஆண்டு காணும் நமது திராவிட இயக்க லட்சியப் பயணத் தோழன் முரசொலி’க்கு நமது வாழ்த்து!” என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Published on: August 11, 2026 at 2:49 pm

சென்னை, ஆக.11, 2026: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நம் ‘‘முரசொலி’ நாளேடு இன்று தனது 85ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து மிகவும் பாராட்டி வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “வெறும் துண்டுக் கையேடாக 85 ஆண்டுகளுக்கு முன் நமது கலைஞர் பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது, உழைத்து இன்று அது பல நெருக்கடிகளையும் – ‘விடுதலை’, ‘தீக்கதிர்’ ஏடுகளைப் போல நெருக்கடி கால நெருப்பாற்றையும், சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி சாதனை சரித்திரம் படைத்துவரும் நாளேடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தனது எழுத்துக்காக ஒரு பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டில் ஏற்ற வைக்கப்பட்டது என்றால் (தோழர் முரசொலி செல்வம் எழுத்தாளர், ஆசிரியர் என்பதால்) அதுவே அதன் விழுப்புண்களின் விழுமியங்களில் ஒன்று.

‘முரசொலித்ததால் விடியல் அழைப்பு’ மக்களின் அடிமைத்தனத்திலிருந்து ‘விடுதலை’ கிடைத்து அது ‘குடிஅரசாக’ப் பரிமளிக்கும் என்பதை தலைப்புகள் மூலம் மக்களுக்கு உணர்த்திடும் மகத்தான அமைதிப் புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்று!
திராவிடர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டுப் பாதுகாப்பு பயணக் காவல் அரண்களில் ஒன்று.
நூறாண்டு காண விழையும் அதன் தோழமை ஏடான ‘விடுதலை’யின் சார்பாகவும், தி.மு.க.வின் தாய்க் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்.. மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவா? ஐகோர்ட்

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? டி.டி.வி தினகரன்
TTV Dinakaran

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com