Madras High Court: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான வழக்கு இன்று (ஆக.11, 2026) விசாரணைக்கு வந்தது.
Madras High Court: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான வழக்கு இன்று (ஆக.11, 2026) விசாரணைக்கு வந்தது.

Published on: August 11, 2026 at 2:19 pm
சென்னை, ஆக.11, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தின் போது கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சபாநாயகரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. பின்னர், மன்னிப்பு கோரிய கடிதங்கள் அளிக்கப்பட்டதால், சபாநாயகர் 43 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
விசாரணையின் போது, “சட்ட விதிகளின்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதால், சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது சட்டபூர்வமானது. இதனால் மனுதாரர் கட்சி எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக இல்லை” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்த நிலையில், மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு திரும்பப் பெறப்பட்டதால், நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com