நாகர்கோவிலில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்.. விபத்தை நேரில் பார்த்தவர் மரணம்!

Bike Crash: நாகர்கோவில் வடசேரி ராஜேஷ் தியேட்டர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Published on: August 11, 2026 at 2:11 pm

கன்னியாகுமரி, ஆக.11, 2026: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ராஜேஷ் தியேட்டர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விபத்து நடந்த இடத்தில் மக்கள் திரண்டு, சூழல் பதற்றமாக மாறியது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பைக் ஓட்டுநர்களுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக தப்பியதால் அப்பகுதி மக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர்.

ஆனால், கண்முன்னே நிகழ்ந்த இந்த விபத்தால் கடும் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அந்த முதியவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? டி.டி.வி தினகரன்

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? டி.டி.வி தினகரன்
TTV Dinakaran

ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com