TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
TN By-Polls: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

Published on: September 7, 2026 at 8:48 pm
சென்னை, செப். 7, 2026: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 6-ம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றத் தடை உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் அட்டவணையின்படி, செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதையும் படிங்க: திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு! ஆதாரம் இல்லாமல் விஜய் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் காட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com