மேகதாது அணை விவகாரம்: தமிழக முதல்வர் விஜயுடன் பேச்சு? டி.கே. சிவகுமார் சூசக பதில்

Mekedatu Talks: “மேகதாது அணை தொடர்பாக அனைவருடனும் பேசத் தயாராக இருக்கிறோம்” என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Published on: July 25, 2026 at 11:41 am

பெங்களூரு, ஜூலை 25, 2026: கர்நாடக அரசு மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய சமநிலை நீர்த்தேக்க அணை அமைக்கும் திட்டம் தொடர்பாக, தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த சந்திப்பு தொடர்பான விவரங்களை தற்போது வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், “அடுத்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். அனைவருடனும் பேசவும், தகவல்களை பகிரவும், இணைந்து செயல்படவும் கர்நாடக அரசு தயாராக உள்ளது” என்று கூறினார். இருப்பினும், திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பின் தேதி அல்லது இடம் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த சந்திப்பில், காவிரி நீர் திறப்பு தொடர்பான விவகாரம், மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகதாது சமநிலை நீர்த்தேக்கத் திட்டம், டி.கே. சிவகுமார் பிரதிநிதித்துவம் செய்யும் கனகபுரா சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையிலான காவிரி நீர்ப் பகிர்வு விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சூழலில், இரு மாநில முதல்வர்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார்களா என்பது அரசியல் மற்றும் நீர்வள வட்டாரங்களில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் சாலை விபத்து மரணங்கள் 3.5% அதிகரிப்பு.. மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில்

திருமண பாலியல் வன்முறை.. மனைவியை கணவன் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
Marital Rape Exception

திருமண பாலியல் வன்முறை.. மனைவியை கணவன் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்ட முடியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com