Squash Final: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அனஹத் சிங் படைத்துள்ளார்.
Squash Final: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அனஹத் சிங் படைத்துள்ளார்.

Published on: July 25, 2026 at 11:52 am
ஒன்டாரியோ, ஜூலை 25 2026: கனடாவின் ஒன்டாரியோவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை அனஹத் சிங் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் எகிப்தின் பார்ப் சமேஹ் (Barb Sameh)-ஐ 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்திய அவர், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
18 வயதான அனஹத் சிங், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் எகிப்தின் ருகய்யா சலேம்-ஐ எதிர்கொள்கிறார். இந்திய நேரப்படி இரவு சுமார் 10.30 மணியளவில் தொடங்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைப்பார்.
இதற்கு முன்னதாக, காலிறுதிப் போட்டியில் எகிப்தின் ஹபீபா ரிஸ்க் -ஐ 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இதன் மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிவரை முன்னேறிய அனஹத் சிங், அப்போது எகிப்தின் நடியன் எல் ஹம்மாமி யிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டு அதைவிட ஒரு படி மேலே சென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர், இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க : மாணவர்களின் குரலை கேட்பது சமூகத்தின் கடமை.. சச்சின் தெண்டுல்கர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com