தென் சீனக் கடலில் பதற்றம்: பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீன கடலோர காவல்படை தாக்குதல்

South China Sea: தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் அரசுக் கப்பல்களை தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில், தென் சீனக் கடலில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Published on: July 25, 2026 at 12:07 pm

மணிலா, ஜூலை 25, 2026: தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) கடற்பகுதியில், பிலிப்பைன்ஸ் அரசின் மீன்வளத் துறைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை நோக்கி சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்ட தகவலின்படி, சீனக் கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் மீன்வளக் கப்பலுக்கு மிக அருகில் ஆபத்தான வகையில் வந்ததுடன், தண்ணீர் பீரங்கியையும் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இதை “ஆபத்தான மற்றும் தொழில்முறை நெறிமுறைகளை மீறிய நடவடிக்கை” என பிலிப்பைன்ஸ் கண்டித்துள்ளது. அதேநேரத்தில், அந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் கப்பல்கள் சட்டவிரோதமாக நுழைந்ததால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.

இந்த வாரத்தில் தென் சீனக் கடலில் சீனா – பிலிப்பைன்ஸ் இடையே நடைபெற்ற மூன்றாவது மோதல் இதுவாகும். இதற்கு முன்பு செகண்ட் தாமஸ் ஷோல் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன.

தென் சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்கு சீனா உரிமை கோரி வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் பிலிப்பைன்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும், அந்தத் தீர்ப்பை சீனா ஏற்கவில்லை. இந்நிலையில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றுவரும் சூழலில் இந்த புதிய சம்பவம் பிராந்திய பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க : ஜெருசலேமில் இந்தியர் கொலை? 31 வயது இளைஞர் கைது!

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
India vs Pakistan

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com