Vijay DK Shivakumar Meet : ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Vijay DK Shivakumar Meet : ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: July 24, 2026 at 9:02 pm
சென்னை, ஜூலை 24, 2026: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை ஆகஸ்ட் 3ஆம் தேதி நேரில் சந்திக்க உள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டரீதியான போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவதை கைவிட வேண்டும், மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனக் கோரிய தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, “மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்பார்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அதேசமயம், கர்நாடக அரசு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், தமிழ்நாட்டிற்கு பாசனத்திற்கான நீரை திறந்து விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கே போதுமான அளவு நீர் இருப்பதாகவும் அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை ஆகஸ்ட் 3ஆம் தேதி நேரில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், தமிழ்நாடு தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி, மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்கவும், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், “மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை முறியடிக்கவும், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெறவும், முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்” என்று தெரிவித்தார். இந்த சந்திப்பு, இரு மாநிலங்களுக்கிடையேயான நீர் பகிர்வு விவகாரத்தில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com