டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல் வீரர்!

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்.

Published on: September 19, 2026 at 1:51 pm

லண்டன், செப்.19, 2026: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்தச் சிறிய இன்னிங்ஸ் மூலம் டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் படைக்காத முக்கியமான சாதனையை பட்லர் பதிவு செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இந்தப் போட்டியில் 30 ரன்கள் சேர்த்ததன் மூலம், அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் பட்லரின் மொத்த ரன்கள் 15,000-ஐ எட்டின. இதன் மூலம் உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை நெருங்கியிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்டின் 14,999 ரன்களை பட்லர் முந்தியுள்ளார். 528 போட்டிகளில் விளையாடியே பட்லர் இந்த மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், பொல்லார்ட் 742 போட்டிகளில் விளையாடி 14,999 ரன்களை சேர்த்துள்ளார்.

இந்தத் தொடரிலும் பட்லர் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் உள்ளார். முதல் டி20 போட்டியில் அவர் அதிரடியாக 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் ரன் சேஸுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். இதனிடையே, பந்துவீச்சில் லியம் டாசன் சிறப்பாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டனும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் லஹிரு உடாரா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதன்பிறகு இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. நிசங்கா அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லியம் டாசனின் 3 விக்கெட்டுகள், மற்ற பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மற்றும் பட்லரின் அதிரடி தொடக்கம் ஆகியவை இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவின. இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. அதேவேளையில், 15,000 டி20 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற ஜோஸ் பட்லரின் சாதனை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : வைபவ் தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. கௌதம் கம்பீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com