Lion Muthuvel Goondas Act Arrest: தொடர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Lion Muthuvel Goondas Act Arrest: தொடர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ‘லயன்’ முத்துவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: November 4, 2026 at 2:07 pm
சென்னை, நவ.4, 2026: சென்னையில் தொழிலதிபர்களிடம் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ‘லயன்’ முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துவேல் என்கிற பி.எம். செட்டியார், தொழிலதிபர் மணிவண்ணனிடம் ரூ.50 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, முன்பணமாக ரூ.2 கோடி பெற்றதாகப் புகார் எழுந்தது. பின்னர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, முத்துவேல் மற்றும் அவரது கூட்டாளி ஜெகன் ஆகிய இருவரையும் அக்டோபர் 20ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் பரிந்துரையின் பேரில் சென்னை காவல் ஆணையர் அருண் அமல்ராஜ், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன்? சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com