Yashasvi Jaiswal: 155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ஜெய்ஸ்வால்; இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்தது.
Yashasvi Jaiswal: 155 ரன்களுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார் ஜெய்ஸ்வால்; இந்நிலையில், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிவடைந்தது.

Published on: November 4, 2026 at 4:17 pm
புதுடெல்லி, நவ.4, 2026: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சமீபத்திய போட்டிகளில் ரன் குவிக்கத் தடுமாறி வந்த அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 346 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலளித்த நியூசிலாந்து ஏ அணி 424 ரன்கள் குவித்து 78 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணி, நான்காவது நாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
ஜெய்ஸ்வால் 162 பந்துகளில் 15 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய யஷ் ரத்தோட் 122 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 247 ரன்கள் சேர்த்தனர்.
இதனால் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 52.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரு அணி கேப்டன்களும் போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். நவம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஜெய்ஸ்வால் மீண்டும் ரன் குவித்திருப்பது இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
இதையும் படிங்க :செக் ஓபன் ஸ்குவாஷ் தொடர்.. சாம்பியன் பட்டம் வென்றார் வேலவன் செந்தில்குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com