Anbil Mahesh Bail Hearing: தி.மு.க முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Anbil Mahesh Bail Hearing: தி.மு.க முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published on: November 7, 2026 at 2:37 pm
சென்னை, நவ.7, 2026: முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான உத்தரவை, நவம்பர் 10ஆம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
விசாரணையின்போது, அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கூறப்படும் பணத்தின் அளவு ரூ.100 கோடியிலிருந்து ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.800 கோடி என மாறி வருவதாகக் கேள்வி எழுப்பினார். மேலும், ஏற்கெனவே ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுவிட்டதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : தீபாவளி நாளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com