பெரியார் பெயரால் மக்கள் பணம் கொள்ளை.. தி.மு.க. மீது விஜய் குற்றஞ்சாட்டு!

Vijay Slams DMK Corruption: “பெரியார் அறிவுலகத்தையே ஊழல் மையமாக மாற்றிய திமுக” என முதலமைச்சர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: November 7, 2026 at 4:09 pm

சென்னை, நவ.7, 2026: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியார் மற்றும் தமிழ் மொழியின் பெயரைப் பயன்படுத்தி திமுக ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலகத்துக்கான நூல்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனே, புத்தகக் கொள்முதலில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நகராட்சி நிர்வாகம், டாஸ்மாக், ஒப்பந்தப் பணிகள், பள்ளிக்கல்வித் துறை என முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நூலகத்திலும் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையும் மன்னிக்காது என்றும், பெரியார் மற்றும் தமிழ் மொழியின் பெயரைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திமுக அரசியல் ரீதியாக மக்களிடம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முதல்வர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரை சிசிபி அலுவலகம் சென்ற செல்லூர் ராஜு.. பரபரப்பு அரசியல் நகர்வுகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com