Vaishnavi Sharma 4 Wickets in 4 Balls: இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி அசத்துகிறார் வைஷ்ணவி சர்மா. இவர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
Vaishnavi Sharma 4 Wickets in 4 Balls: இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி அசத்துகிறார் வைஷ்ணவி சர்மா. இவர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

Published on: November 8, 2026 at 1:50 pm
Updated on: November 8, 2026 at 1:51 pm
புதுடெல்லி, நவ.8, 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய அவர், தனது முதல் 5 விக்கெட் சாதனையையும் பதிவு செய்தார்.
இதற்கிடையே, நியூ சண்டிகரில் நடைபெற்ற பிசிசிஐ மகளிர் டி20 கோப்பைத் தொடரில் மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடிய வைஷ்ணவி, ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் டி20 போட்டியில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு ஹுமைரா காசி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தைப் பயிற்சிக்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அனுபவமும், உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறனை மேம்படுத்தியதும் தனது மறுவருகைக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :லண்டன் ஓபன் ஸ்குவாஷ்.. காலிறுதிக்கு முன்னேறினார் வேலவன் செந்தில்குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com