CM Vijay: சட்டம்-ஒழுங்கு குறித்து 3-வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்; இந்நிலையில், 15,000 போலீஸாரை புதிதாக நியமிக்க திட்டம் எனத் தகவல்.
CM Vijay: சட்டம்-ஒழுங்கு குறித்து 3-வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்; இந்நிலையில், 15,000 போலீஸாரை புதிதாக நியமிக்க திட்டம் எனத் தகவல்.

Published on: November 13, 2026 at 11:22 am
சென்னை, நவ.13, 2026: தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள், குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 3-வது நாளாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். நிர்மல் குமார், தவெக அரசு பொறுப்பேற்றது முதல் 19,000 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையைப் போக்க 10,000 முதல் 15,000 பேர் வரை புதிதாகப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் சுமார் 6,700 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அடையாளம் காணப்பட்ட 3,229 குற்றம் சாட்டப்பட்டவர்களில் 152 பேரைத் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் தொடர்பாக 9,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : ஜாமீன் கோரும் அன்பில் மகேஷ்.. சென்னை ஐகோர்ட்டில் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com