ஜாமீன் கோரும் அன்பில் மகேஷ்.. சென்னை ஐகோர்ட்டில் மனு!

Anbil Mahesh Seeks Bail : ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் அன்பில் மகேஷ்.

Published on: November 12, 2026 at 9:56 pm

சென்னை, நவ.12, 2026: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை நவம்பர் 10-ம் தேதி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அன்பில் மகேஷுக்கு எதிரான முதற்கட்ட ஆதாரங்களைக் காட்டுவதாகவும் கூறி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு அவசர விசாரணை கோரி முறையிட்டார். மனு எண் வழங்கப்பட்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள்.. ஆளுநரிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Fishermen Return Alert

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. நவ.12 இரவுக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை!

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு போலீஸ் சம்மன்!
DMK MLA Summoned by Police

முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு பேச்சு.. திமுக எம்.எல்.ஏ. துரை

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங்!
IPL 2027 Player Trade

ஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்கள் பரிமாற்றம்.. பஞ்சாப் அணிக்கு ஹர்திக் பாண்டியா; மும்பை

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com