டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த விஷ்ணு பிரியா.. நேரில் வாழ்த்திய கு. ராமகிருட்டிணன்!

Vishnu Priya Felicitated: டி.என்.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த விஷ்ணு பிரியாவை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் நேரில் வாழ்த்தினார்.

Published on: July 6, 2026 at 6:21 pm

சென்னை, ஜூலை 6, 206: கோவை மாவட்டம் அன்னூர் நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த விஷ்ணுப்பிரியா, டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A தேர்வில் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவர், பொது மதிப்பெண் தரவரிசை பட்டியலில் 267வது இடத்தையும், அருந்ததியர் சமூகத்தினரில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். இந்தச் சாதனை, அவரது கடின உழைப்பையும், கல்வி மீது கொண்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

அவரது வெற்றியை பாராட்டும் வகையில், பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் ஜூலை 5, 2026 அன்று மாலை 5 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவர், பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு, சமூகத்தில் கல்வி மூலம் முன்னேற்றம் அடையக்கூடிய வாய்ப்புகளை வலியுறுத்துகிறது. குறிப்பாக, அருந்ததியர் சமூகத்தினருக்கு இது ஒரு ஊக்கமாகவும், புதிய தலைமுறைக்கு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : எய்ம்ஸ் பி.எஸ்சி நர்சிங் முடிவுகள் வெளியீடு.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com