Vaiko Alleges Political Deal : ம.தி.மு.க. எம்.எல்.ஏ-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது பேரம்தான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
Vaiko Alleges Political Deal : ம.தி.மு.க. எம்.எல்.ஏ-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது பேரம்தான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Published on: July 6, 2026 at 6:11 pm
சென்னை, ஜூலை 6, 2026: மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “ம.தி.மு.க. எம்.எல்.ஏ-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது பேரம்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு மீது தினந்தோறும் குற்றச்சாட்டுகளை வைக்கும் தி.மு.க, த.வெ.க ஆட்சிக்கு எதிராக குதிரைப் பேரம் பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.
வைகோ, “முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு பெரும்பான்மை வந்ததும், தி.மு.க குதிரைப் பேரம் என்கிறது. ஆனால், நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம் — த.வெ.க அரசுக்கு ம.தி.மு.க முழு பாதுகாப்பு அளிக்கும்” என வலியுறுத்தினார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக வந்தது. அதேசமயம், தி.மு.க படுதோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில், வைகோவின் கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது.
இந்த உரை, வைகோ,தி.மு.க, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க : உழவர் சாவு வேதனை.. பயிர்க்கடனை முழுமையான தள்ளுபடி செய்க.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com