TET 2026 Paper Leak: மகாராஷ்டிரா TET 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ் மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திரர் உறுதி தெரிவித்துள்ளார்.
TET 2026 Paper Leak: மகாராஷ்டிரா TET 2026 தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவ் மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திரர் உறுதி தெரிவித்துள்ளார்.

Published on: June 28, 2026 at 2:25 pm
மும்பை, ஜுன் 27 2026 : மகாராஷ்டிரா மாநில TET 2026 தேர்வுத்தாள் கசிவு தொடர்பாக மாநில அரசில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது. தேர்வுத் தாள் கசிவு விவகாரம் தீவிரமடைந்த நிலையில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தானே (Thane) இணை காவல் ஆணையர் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ஃபட்னாவிஸ், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிறப்பு குழு விசாரணைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சதானந்த் டேட் ஆகியோருடன் ஆலோசித்து, குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வுத் தாள் கசிவு காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் கல்வி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் தொடர்பான கசிவு விவகாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ் மோகன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com