தமிழக வெற்றிக் கழக முதல் பட்ஜெட்.. கல்விக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு

TN Budget 2026-27 : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட்டில் கல்விக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published on: August 5, 2026 at 12:24 pm

சென்னை, ஆக.5, 2026: தமிழக சட்டமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்கச் செய்கிறது. இந்தப் பட்ஜெட்டில் முதல்கட்டமாக பள்ளி கல்விக்காக ரூ. 44,527 கோடி, சமூக நலத்துறைக்காக ரூ. 9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், மதுபான வரி (cess) மூலம் ரூ. 16,000 கோடி வருவாய் ஈட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சு மற்றும் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை ஆளும் டிவிகே (TVK) சட்டமன்றத்தில் தீவிரமாக முன்வைக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், ஆளும் கட்சி மற்றும் திமுக இடையே கடுமையான மோதல் நிகழ வாய்ப்பு அதிகம்.

முதலமைச்சர், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, பட்ஜெட்டிற்கான முக்கிய அறிவிப்புகளை இறுதி செய்துள்ளார். “வெற்றி தமிழகம்” என்ற தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும், மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத்தில் திமுகவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜமோகன் மற்றும் ரமேஷ் ஆகிய அமைச்சர்களை டிவிகே தலைமை களமிறக்கியுள்ளது. மாநில நிதியமைச்சர் என். மேரி வில்சன் 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இதையும் படிங்க : வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம்… தேர்வு முறையில் தொடர் சீர்திருத்தம்: பிரதமர் மோடி

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்!
CM Vijay

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com