Minister Rajmohan Arumugam: பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் உறுதியளித்துள்ளார்.
Minister Rajmohan Arumugam: பள்ளிகள் அருகே டாஸ்மாக், உறுதியாக அகற்றப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் உறுதியளித்துள்ளார்.

Published on: June 15, 2026 at 12:55 pm
மதுரை, ஜூன் 15, 2026: மதுரையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் புதுப்பிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் மதுபானக் கடைகள் இருப்பது தவறான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.
அரசுப் பொருட்காட்சி மதுரையில் இன்று மாலை தொடங்கப்படவுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். மதுரை திருவிழா மண்ணில் அரசுப் பொருட்காட்சியும் திருவிழாவாக அமையும் எனவும் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நீதிமன்ற வழக்குகள் தீர்க்கப்பட்ட பின்னர் அவை நிரப்பப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார். மாணவர்களின் மனநல பாதுகாப்பில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், உடற்கல்வி நேரத்தை எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மாணவர்களிடையே ஏற்படும் ஒழுக்கப் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க மனநல ஆலோசனை, தன்னம்பிக்கை மற்றும் தன்முனைப்பு பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே சென்று சமூக மற்றும் பொருளாதார காரணிகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு.. என்டிஏ அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com