“AYUSH படிப்பில் சேர விருப்பமா? நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்!”

AYUSH Admissions: 2026-27 கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது.

Published on: July 12, 2026 at 4:23 pm

சென்னை, ஜூலை 12, 2026: 2026-27 கல்வியாண்டிற்கான AYUSH படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நாளை (ஜூலை 13) தொடங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் www.tnayushselection.org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு ஜூலை 13 முதல் ஜூலை 31 மாலை 5 மணி வரை நடைபெறும். தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 5 அரசு ஆயுஷ் கல்லூரிகளில் மொத்தம் 320 இடங்கள் உள்ளன. இதில் 48 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 272 இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநிலத்தில் உள்ள 29 தனியார் ஆயுஷ் கல்லூரிகளில் மொத்தம் 1,920 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தகுதி, இடஒதுக்கீடு மற்றும் சேர்க்கை தொடர்பான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க பொறியியல் தேர்வு செய்யப் போறீங்களா? ஒவ்வொரு மாணாக்கரும் கேட்க வேண்டிய 7 கேள்விகள்!

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம்! CM Vijay

12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ சேர்க்கை.. பிரதமருக்கு, முதலமைச்சர் விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com