ஓணம் ஸ்பெஷல்… சென்னை – கேரளா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Onam Special Trains : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை, மங்களூரு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் இடையே பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

Published on: July 12, 2026 at 2:57 pm

சென்னை, ஜூலை 12, 2026: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா நோக்கி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, மங்களூரு – சென்னை எழும்பூர் இடையே ஜூலை 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல் சென்னை எழும்பூர் – மங்களூரு இடையே ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சேவை வழங்கப்படும்.

மேலும், சென்னை சென்ட்ரல் – கொல்லம் இடையே ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் ஓணம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கு பதிலாக கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதேபோல், திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் பயணிகள் வசதிக்காக சிறப்பு சேவைகள் இயக்கப்படவுள்ளன.

ஓணம் பண்டிகையையொட்டி அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை சமாளிக்கும் நோக்கில் இந்த சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க அரசு விழாக்களில் முதலில் மாநிலப் பாடல்.. மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com