ஆ.ராசாவுக்கு புதிய சிக்கல்… பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு!

Complaint against A. Raja : முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Published on: July 12, 2026 at 4:31 pm

பெரம்பலூர், ஜூலை 12, 2026: முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ராசாமணிகண்டன், இந்த புகார் மனுவை காவல்துறையிடம் வழங்கியுள்ளார். திருவாரூரில் கடந்த ஜூன் 25 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அந்த பேச்சு பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும், சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆ.ராசா மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்தாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மனுவைப் பெற்று பரிசீலனை செய்து வருகிறது. புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை முடிவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்… சென்னை – கேரளா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com