Kenya School Fire accident: கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Kenya School Fire accident: கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: May 28, 2026 at 4:58 pm
நைரோபி, மே 28 2026: கென்யா, நைரோபி அருகே உள்ள பெண்கள் பள்ளி விடுதியில் நேற்று (புதன்கிழமை மே 27, 2026) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இரவு நேரத்தில் மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏற்பட்டதால் மாணவிகள் பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கென்யா கல்வி அமைச்சகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மின்சார கசிவு காரணமாக அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் பள்ளி விடுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும், சில மாணவிகள் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவிகளில் பெரும்பாளானோர் போலீஸ் அதிகாரிகளின் மகள்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 12 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com