பெண் கவிஞருக்கு இலக்கிய நோபல் பரிசு.. யார் இந்த ஆன் கார்சன்?

Anne Carson Nobel Prize 2026: கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 9, 2026 at 11:49 am

ஸ்வீடன், அக்.9, 2026: கனடாவைச் சேர்ந்த கவிஞரும் கட்டுரையாளருமான ஆன் கார்சனுக்கு 2026-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்ட அறிவிப்பில், “செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடல் மூலம் சமகால இலக்கியத்துக்கு புதிய வடிவங்களை உருவாக்கிய துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக” இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 76 வயதான ஆன் கார்சன், கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு மற்றும் செவ்வியல் இலக்கிய ஆய்வு ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து தனித்துவமான படைப்புகளை உருவாக்கியவர்.

1950-ம் ஆண்டு கனடாவின் டொராண்டோவில் பிறந்த ஆன் கார்சன், பண்டைய கிரேக்க இலக்கியம் மற்றும் புராணங்களை நவீன பார்வையில் மறுபரிசீலனை செய்வதில் புகழ்பெற்றவர். அவரது 1986-ம் ஆண்டு வெளியான ஈராஸ் தி பிட்டர்ஸ்வீட் (Eros the Bittersweet) மற்றும் 1998-ல் வெளியான “ஆட்டோபயோகிராபி ஆஃப் ரெட் (Autobiography of Red) ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

குறிப்பாக, ஆட்டோபயோகிராபி ஆஃப் ரெட் என்ற கவிதை நாவலில், பண்டைய கிரேக்கக் கதையை நவீன இளைஞனின் காதல், ஏக்கம் மற்றும் உணர்வுகளுடன் இணைத்து புதிய வடிவில் வழங்கியுள்ளார். கவிதை மற்றும் உரைநடையின் எல்லைகளைத் தாண்டி, நாடகம், ஓபரா உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்த விருதின் மூலம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற 19-வது பெண் என்ற பெருமையையும் ஆன் கார்சன் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகை 1.2 கோடி ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் 12 லட்சம் அமெரிக்க டாலர்) ஆகும். பரிசு அறிவிக்கப்பட்டபோது ஐஸ்லாந்தில் இருந்த கார்சன், இந்த செய்தி தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஆன் கார்சனின் தேர்வு உலக இலக்கிய வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : வேதியியல் நோபல் பரிசு.. பிரான்ஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com