National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
Published on: April 15, 2025 at 10:58 pm
Updated on: April 16, 2025 at 10:17 am
புதுடெல்லி, ஏப்.15 2025: நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் உரிமையாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் தொடர்பான பணமோசடி வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா மற்றும் பலர் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை இன்று (ஏப்.15 2025) டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த வழக்கானது, ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் 2025 ஏப்.9ஆம் தேதி ஏற்கனவே அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 44 மற்றும் 45 இன் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, துணை குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் வெளிநாட்டுத் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் யங் இந்தியன், டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சுனில் பண்டாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து யங் இந்தியன் நிறுவனத்தில் 76% பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தனர்.
மீதமுள்ள பங்கு மறைந்த வோரா மற்றும் பெர்னாடஸ் வசம் இருந்தது. விசாரணையின் போது, ஏஜேஎல் அதன் வெளியீட்டு நடவடிக்கைகளை 2008 ஆம் ஆண்டு மூடிவிட்டதாக அமலாக்கத் துறை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு (ஏஐசிசி) ₹90.21 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தாலும், ஏஐசிசி அந்தக் கடனைத் திரும்பப் பெற முடியாததாகக் கருதி, அதை யங் இந்தியனுக்கு வெறும் ₹50 லட்சத்திற்கு விற்றது எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : National Herald case: ராகுல், சோனியா தொடர்புடைய சொத்துக்கள் பறிமுதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com