Buddhist Monastery Found in Bihar : பீகாரில் 1,200 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Buddhist Monastery Found in Bihar : பீகாரில் 1,200 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Published on: May 16, 2026 at 7:16 pm
பாட்னா, மே 16, 2026: பீஹார் மாநிலம் கயா மாவட்டத்தில் 1200 ஆண்டுகள் பழமையான பௌத்த மடத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில் அரிய பௌத்த சிலைகள், வோட்டிவ் ஸ்தூபங்கள், பானைகள் மற்றும் பல தொல்பொருட்கள் வெளிச்சம் கண்டுள்ளன.
இந்த அகழாய்வானது, கயா மாவட்டம், துப்பா கிராமம் (போத் கயாவிலிருந்து 30 கி.மீ., பாட்ட்னாவிலிருந்து 140 கி.மீ.) பகுதியில் நடைபெற்றது. இந்த ஆய்வினை மகதா பல்கலைக்கழகத்தின் பண்டைய இந்திய மற்றும் ஆசிய ஆய்வு துறையினர் மே 9, 2026 அன்று அகழாய்வு தொடங்கினர்.
இதற்கிடையில், ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ள இந்த இடம், மேலும் அகழாய்வு செய்தால் விரிவடையக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
இந்த நிலையில் இப்பகுதியில், பழங்கால கட்டிடங்கள், சிறிய அறைகள் , சுவர்களில் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், வோட்டிவ் ஸ்தூபங்கள் (இட்டிகை மற்றும் கல்), கற்சிலைகள் (புத்தர், தாரா தேவியை உட்பட) கண்டுபிடிக்கப்பட்டன.
இதில், லைம் பிளாஸ்டர் தரை மிக நுணுக்கமாக செய்யப்பட்டிருப்பது, அக்கால கட்டுமான திறமையை காட்டுகிறது. இதுமட்டுமின்றி தாமரை பூ வடிவில் மணிகள் போன்ற அரிய பொருட்களும் வெளிச்சம் கண்டுள்ளன.
இந்த இடம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு மனித குடியிருப்பின் சான்றுகளை வழங்குகிறது. இதனால், நளந்தா மகாவிஹாரா போன்ற பண்டைய மடங்களின் அமைப்புடன் ஒத்ததாக அறைகள் அமைந்துள்ளன.
அதன்படி இவ்விடத்தை சந்நியாசிகள் அல்லது பண்டிதர்கள் தியானம் மற்றும் ஓய்வுக்காக பயன்படுத்தியதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : 500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com