22 லட்சம் மாணவர்கள் பாதிப்பு.. மோடி மௌனம் ஏன்? ராகுல் காந்தி

NEET Leak : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாட்டில் 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: May 17, 2026 at 3:15 pm

புதுடெல்லி, மே 17, 2026: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இளங்கலை நீட் 2026 தேர்வு கேள்வித்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நீக்காததற்கு விளக்கம் கேட்டு, மௌனம் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு

இது குறித்து ராகுல் காந்தி, “2024-இல் நீட் வினாத்தாள் கசிவு நடந்தபோதும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை; 2026-இல் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், அமைச்சர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? எனக் கேள்வியெழுப்பினார். மேலும், “நாட்டின் 22 லட்சம் மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர், ஆனால் மோடி ஒரு வார்த்தையும் பேசவில்லை” எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மோடிதான் பொறுப்பு

இந்த நிலையில், “தர்மேந்திர பிரதானை உடனடியாக நீக்குங்கள், இல்லையெனில் மோடி தானே பொறுப்பு ஏற்க வேண்டும்” எனவும் ராகுல் காந்தி கூறினார்.

கைது- விசாரணை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இதில், புனே, நாசிக், டெல்லி உள்ளிட்ட இடங்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கரப்பான்பூச்சி விமர்சனம்.. உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் விளக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com