Cockroaches Remark : உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், கரப்பான்பூச்சி விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
Cockroaches Remark : உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், கரப்பான்பூச்சி விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

Published on: May 17, 2026 at 2:58 pm
புதுடெல்லி, மே 17, 2026: இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், கரப்பான்பூச்சிகள் (காக்ரோச்சுகள்) குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்து இந்திய இளைஞர்களை குறித்ததல்ல, போலியான பட்டப்படிப்பு வைத்திருப்பவர்களை மட்டுமே குறித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அவர் ஊடகங்கள் தனது வாய்மொழி கருத்துகளை தவறாக மேற்கோள் காட்டியதாகவும், இந்திய இளைஞர்களை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வழக்கு
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ‘மூத்த வழக்கறிஞர்’ பட்டம் தொடர்பான மனுவை விசாரிக்கும் போது, சூர்யகாந்த் கடுமையான வாய்மொழி கருத்துகளை தெரிவித்தார்.
அந்த நேரத்தில், “சமூகத்தில் ஏற்கனவே பராசிட்கள் உள்ளனர்; சில இளைஞர்கள் காக்ரோச்சுகள் (கரப்பான்பூச்சி) போல வேலை இல்லாமல் ஊடகம், சமூக ஊடகம், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் ஆகி தாக்குகின்றனர்” எனக் கூறினார்.
விளக்கம் மற்றும் மறுப்பு
இந்த நிலையில், நீதிபதி சூர்யகாந்த், ஊடகங்கள் தனது கருத்துகளை தவறாக எடுத்துரைத்ததாகக் கூறியுள்ளார். அதில், “தமது விமர்சனம், சட்டம், ஊடகம், சமூக ஊடகம் போன்ற துறைகளில் போலியான பட்டப்படிப்பு கொண்டு நுழைந்தவர்களை மட்டுமே குறித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய இளைஞர்கள் எனக்கு ஊக்கமளிப்பவர்கள்; அவர்கள் நாட்டின் தூண்கள்; அவர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பீகாரில் 1200 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com