Amit Shah: வந்தே மாதரம் அவமதிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் மற்றும் சோனியா காந்திக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
Amit Shah: வந்தே மாதரம் அவமதிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் மற்றும் சோனியா காந்திக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Published on: August 17, 2026 at 12:18 pm
புதுடெல்லி ஆகஸ்ட் 17, 2026; அமித்ஷா, சுதந்திர தின நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கடுமையாக தாக்குதல் நடத்தினார். ‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் தலைமையகத்தில் முழுமையாக பாடுவதை அவர் தடுத்ததாக குற்றம் சாட்டிய அமித்ஷா, “இந்த பாவத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்” என்று கூறினார். காங்கிரஸ், இந்த குற்றச்சாட்டை மறுத்து, சோனியா காந்தி மல்லிகார்ஜுன் கார்கேக்கு நாற்காலி கேட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமித்ஷா காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். “வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதை சோனியா காந்தி தடுத்தார். 140 கோடி மக்கள் இதை தொலைக்காட்சியில் பார்த்தனர். இது ஒரு பாவம்; மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
அமித்ஷா, “வந்தே மாதரம் பாடியதற்காக ஆயிரக்கணக்கானோர் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தனர். ஆனால், வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் அந்த பாடலை மறந்துவிட்டது” என்று குற்றம் சாட்டினார். அவர், “சோனியா ஜி, உங்களிடம் சிறிதளவு வெட்கம் இருந்தால், இரண்டு கைகளையும் கூப்பி பாங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆன்மாவுக்கும், நாட்டின் மக்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம், காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்வின் போது நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வீடியோ காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய பதிவுகள், சோனியா காந்தி பாடலை நிறுத்தச் சொன்னதாக பாரதிய ஜனதா கட்சி கரப்பில் குற்றம் சாட்டப்பட்டன. ஆனால், காங்கிரஸ், “சோனியா காந்தி, நீண்ட நேரம் நின்றிருந்த கார்கேக்கு நாற்காலி கேட்டார்; பாடலை நிறுத்தச் சொல்லவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, சோனியா காந்தியை விமர்சித்து, “வந்தே மாதரம் பாடலை நிறுத்தச் சொல்வது, தேசபக்திக்கும், பாங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும் அவமரியாதை” என்று கூறினார். இதேசமயம், மங்களூருவில் சோனியா காந்திக்கு எதிராக போலீஸ் புகார் அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க; வந்தே மாதரம் முழுபாடலுக்கு சோனியா காந்தி எதிர்ப்பு? தீயாய் பரவிய வீடியோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com