ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Crop Loan Waiver : ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடியாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Published on: August 17, 2026 at 9:04 pm

சென்னை, ஆக.17, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) முதலமைச்சர் விஜய், விதி எண் 110-ன் கீழ் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர், “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், விவசாயிகள் நம் உயிர் நாடி” என்று வலியுறுத்தி, உலகின் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் விவசாயம் மட்டுமே என்றும், அதை மதித்து பாதுகாக்கும் நாடுகளில் தான் மக்கள் வளமாக வாழ முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மே 25-ஆம் தேதி, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த ரூ.50,000 வரை பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், ஜூன் 19-ஆம் தேதி, ரூ.75,000 வரை பெற்றிருந்த கடன்கள் முழுமையாகவும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி வழங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான தள்ளுபடி வழங்கப்பட்டது.

ஜூலை 31-ஆம் தேதி வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்கிடையில், விவசாய சங்கங்கள் தள்ளுபடி தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

முன்னதாக, பயிர்க்கடன் தள்ளுபடி தொகைகள் 4-5 ஆண்டுகளில் தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தப்பட்டன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 நவம்பர் 28-ஆம் தேதியிட்ட வழிகாட்டுதலின்படி, 45 முதல் 60 நாட்களுக்குள் முழுத்தொகையையும் அரசால் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும். ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம், 2,38,264 விவசாயிகள் கூடுதல் ரூ.40,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கூடுதல் தள்ளுபடியால் அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும், “விவசாயிகளின் நலனில் தான் நமது நலன் உள்ளது” என்று முதலமைச்சர் வலியுறுத்தி, மொத்தமாக 13.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இதையும் படிங்க : சட்டப் பேரவையில் SORRY கேட்ட விஜய்.. என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com