Gandhi Jayanti Holiday: காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Gandhi Jayanti Holiday: காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Published on: October 1, 2026 at 11:53 am
சென்னை, அக்.1, 2026: காந்தி ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் கூடுதல் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை–தென்காசி, சென்னை–போத்தனூர், தாம்பரம்–மானாமதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு அக்டோபர் 1 இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தென்காசியை சென்றடையும்.
மேலும், சென்னை எழும்பூர்–எர்ணாகுளம், பெங்களூரு–திருவனந்தபுரம், பெங்களூரு–சென்னை உள்ளிட்ட வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு–சென்னை சிறப்பு ரயில் அக்டோபர் 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரு திசைகளிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 1 காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விடுமுறை காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? தொல். திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com