ஐ.சி.சி தரவரிசை.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீசரணி!

Sri Sarani: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, ஐசிசி மகளிர் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Published on: September 30, 2026 at 2:38 pm

Updated on: September 30, 2026 at 2:40 pm

புதுடெல்லி, செப்.30, 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, ஐசிசி மகளிர் டி20 சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (செப்.29, 2026) வெளியான புதிய தரவரிசைப் பட்டியலில் 817 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற அவர், மகளிர் டி20 தரவரிசை வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் 2018-ம் ஆண்டு நவம்பரில் 806 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.

இதன் மூலம் மேகன் ஸ்கட்டின் சாதனையை ஸ்ரீ சரணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராக அவர் வெளிப்படுத்திய சிறப்பான பந்துவீச்சு, இந்த தரவரிசை உயர்வில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இறுதிப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரீ சரணி, 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில், ஸ்ரீ சரணிக்கும் இந்தத் தொடர் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தொடரின் முடிவில் அவரது சிறப்பான பந்துவீச்சு செயல்பாடுகள் ஐசிசி டி20 தரவரிசையிலும் பிரதிபலித்துள்ளன.

இதனிடையே, இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டர்களின் தரவரிசையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 46 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். மேலும், ஷஃபாலி வர்மாவுடன் இணைந்து 99 ரன்கள் கொண்ட தொடக்க விக்கெட் கூட்டணியை அமைத்தார். இந்திய அணி 216 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்? பரபரப்பு தகவல்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com