விசாரணை வளையத்தில் முகமது ரிஸ்வான்.. ‘செல்போனை திரும்ப கொடு’!

Mohammad Rizwan: முகமது ரிஸ்வான், தன்னிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அந்நாட்டின் தேசிய சைபர் கிரைம் உத்தரவிட்டுள்ளது.

Published on: September 30, 2026 at 2:49 pm

புதுடெல்லி, செப்.30, 2026: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான், தன்னிடம் நடத்தப்படும் விசாரணை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தேசிய சைபர் கிரைம் விசாரணை அமைப்பான (NCCIA) வசம் உள்ள தனது செல்போனை திருப்பி வழங்க வேண்டும் என்றும் கோரி அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை என்.சி.சி.ஐ.ஏ பின்பற்ற வேண்டும் என்றும், தன் மீதான விசாரணையின் தன்மை குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாக ஈ.எஸ்.பி.என் கிரிக் ஃஇன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இங்கிலாந்தில் வைத்து ரிஸ்வானின் செல்போன் என்.சி.சி.ஐ.ஏ அதிகாரிகளால் பெறப்பட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த மறுநாளே இந்த நடவடிக்கை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி செல்போனை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்றபோதிலும், விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் தானாகவே செல்போனை ஒப்படைத்ததாக ரிஸ்வான் தரப்பு கூறியுள்ளது. மேலும், அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் செல்போனின் கடவுச்சொல்லையும் வழங்கியதாகவும், சுமார் 3 மணி நேரத்தில் செல்போன் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், செல்போன் ஒப்படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் அது தன்னிடம் திருப்பி வழங்கப்படவில்லை என ரிஸ்வான் தெரிவித்துள்ளார். இதனிடையே, தன் மீதான விசாரணை எதற்காக நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகள் தெளிவான தகவலை வழங்கவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விசாரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ள குறிப்பிட்ட சம்பவம் அல்லது குற்றச்சாட்டு என்ன என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என ரிஸ்வான் தற்போது கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரிஸ்வான் தாக்கல் செய்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் என்.சி.சி.ஐ.ஏ-க்கு உள்ளதா என்ற கேள்வியை எதிர்த்து ரிஸ்வான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை நீதிமன்றம் ஏற்காத நிலையில், விசாரணைக்கு ரிஸ்வான் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதே நேரத்தில், விசாரணையின் பெயரில் அவருக்கு துன்புறுத்தல் அல்லது தேவையற்ற சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்றும் என்.சி.சி.ஐ.ஏ-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு என்.சி.சி.ஐ.ஏ தரப்பில் தன்னை தொடர்புகொண்டு விசாரணை எவ்வாறு தொடரும் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ரிஸ்வான் தனது புதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்கு அடிப்படையாக உள்ள சம்பவம் என்ன, எதிர்காலத்தில் விசாரணைக்காக எப்போது ரிஸ்வான் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என அவரது சட்டப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர். மேலும், என்.சி.சி.ஐ.ஏ வசம் உள்ள செல்போன் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களை திருப்பி வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிஸ்வான் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஐ.சி.சி தரவரிசை.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ஸ்ரீசரணி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com