Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
Vijay Slams Stalin: மு.க ஸ்டாலின், ஆபாச நதி, வன்ம நதியை வளர்த்து வைத்துள்ளார் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.

Published on: October 1, 2026 at 12:13 pm
தாராபுரம், அக்.1, 2026: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் செப்டம்பர் 30 அன்று பிரசாரம் மேற்கொண்டார். அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார்.
தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே க்யூ.ஆர் குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டுடன் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது உரையில், கடந்த கால அரசுகளை குறிப்பிட்டு “அன்று அம்மா ஆட்சி, அடுத்து அப்பா ஆட்சி; இன்று நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி” என விஜய் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை ஒருமையில் விமர்சிப்பதாகக் கூறிய அவர், தான் பாசத்துடன் பேசுவதாகத் தெரிவித்தார். திமுக தன்னை மற்றும் தவெகவை எவ்வளவு விமர்சித்தாலும், அதனால் தங்களது கட்சி மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். திமுகவின் பேச்சு மற்றும் அரசியல் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், “ஆபாச நதி, வன்ம நதி” போன்ற சொற்களையும் தனது உரையில் விஜய் பயன்படுத்தினார்.
திமுக மற்றும் அதிமுக இடையேயான அரசியல் தொடர்பையும் விஜய் தனது உரையில் விமர்சித்தார். பாஜகவின் கிளையாக இருந்த ஒரு கட்சி தற்போது திமுகவின் கிளையாக மாறிவிட்டதாகக் கூறிய அவர், திமுகவும் அதிமுகவும் வெளியில் தனித்தனியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் கூட்டாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுகவுக்கு எதிராக அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த கொங்கு மக்கள், தற்போது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்களிப்பது ஒரே கட்சிக்கு வாக்களிப்பதைப் போன்றது என்று விஜய் கூறினார். எந்த மத நம்பிக்கைக்கும் தவெக எதிரானது அல்ல என்றும், கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியதாகக் குறிப்பிடப்பட்ட “எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தோம்” என்ற கருத்தையும் விஜய் தனது உரையில் எடுத்துரைத்தார். துரைமுருகன் கூறியதைப் போலவே, தவெகவும் சாதாரண மக்களை தேர்தலில் நிறுத்தி அரசியல் ரீதியாக எதிரிகளை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். “மன்னர் ஆட்சி மனப்பான்மை” தவெகவுக்கு இல்லை என்றும் கூறிய விஜய், திமுக தலைமையுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேள்வியும் எழுப்பினார்.
இதையும் படிங்க : கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com