ஜெம் வீரமணி போக்சோ வழக்கு.. சாந்தி வழக்கில் முக்கிய உத்தரவு!

GEM R Veeramani Case : சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சாந்தியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Published on: October 1, 2026 at 11:58 am

சென்னை, அக்.1, 2026: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி தொடர்பான சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா இந்த உத்தரவை பிறப்பித்தார். மூவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்த நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மனுதாரர்கள் தரப்பில், கைது நடைமுறை முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், கைது செய்யப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், போலீஸாரின் விசாரணை நிறைவடைந்துவிட்டதால் தொடர்ந்து காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களது தரப்பு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸார், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்கவோ, சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிரட்டவோ வாய்ப்புள்ளதாகவும், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் போலீஸார் வலியுறுத்தினர்.

இந்த வழக்கு, 2025 அக்டோபரில் உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பப் பிரிவு போலீஸாருக்கு அனுப்பப்பட்ட பென்டிரைவில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவருக்கு முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற காட்சிகள் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டதாகவும், இதையடுத்து மத்திய குற்றப்பிரிவின் ஆட்கடத்தல் மற்றும் ஒழுக்கக்கேடு தடுப்புப் பிரிவு 2025 அக்டோபர் 7-ம் தேதி வழக்குப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்ட நிலையில், வீரமணி, மகேந்திர சிம்ஹன் மற்றும் சாந்தி ஆகியோர் ஆகஸ்ட் 29-ம் தேதி போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஜெம் வீரமணியை திமுக பாதுகாத்தது எனக் கூறுவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிராக மனு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com