2018 ஸ்டெர்லைட் போராட்டம்.. போலீஸ் வாகனத்தில் துப்பாக்கியுடன் நின்ற காவலர் மரணம்!

2018 Sterlite Protest: 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

Published on: October 1, 2026 at 11:27 am

தூத்துக்குடி, அக்.1, 2026: 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் வாகனத்தின் மீது நின்றபடி துப்பாக்கியுடன் காணப்பட்ட ஆயுதப்படைக் காவலர் ராஜா உயிரிழந்துள்ளார். 46 வயதான ராஜா, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்ததார்.

2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றபோது பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின்போது ராஜா போலீஸ் வாகனத்தின் மீது நின்று துப்பாக்கியால் சுடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், சம்பவம் தொடர்பாக 17 போலீஸார் மற்றும் அதிகாரிகளை பொறுப்புக்கூற வைத்ததுடன், போலீஸ் துப்பாக்கிச்சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டதல்ல என்றும், அது தூண்டுதலற்ற மற்றும் அளவுக்கு மீறிய நடவடிக்கை என்றும் குறிப்பிட்டது. சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ராஜாவின் மரணம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க : சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை.. வழக்கின் விவரம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்



Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com